எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியாவும் சீனாவும் திட்டம்

0 1898

கிழக்கு லடாக்கில் எல்லைப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், படைகளை விலக்கும் விவகாரத்தில் சீனா விவாதிக்க மறுப்பதால் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 16-வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் லே-யை அடுத்த சுசூல் பகுதியில் நடைபெற்றது.

12 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எல்லைக் கோடு அருகே படைகளை விலக்குவது, சீனா அமைக்கும் பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் குறித்து இந்தியா தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மேற்கில் உள்ள Demchok மற்றும் Depsang பகுதிகளில் படைகளை விலக்குவது குறித்து சீனா விவாதிக்க மறுத்ததால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இருதரப்பினரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலை நாட்டுவது, எல்லைக் கோடு அருகே நிலவும் பிரச்சினைகளுக்கு ராணுவம் மற்றும் பிரதிநிதிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு பகுதியில் அமைதியை மீட்டெடுப்பதுடன், இரு தரப்பு உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments