சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவி பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி!

0 108979

சேலம் மாவட்டம் மேச்சேரியில், குடும்ப பிரச்சனை காரணமாக பிளஸ் 2 மாணவி பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

தந்தையை இழந்த அந்த 16 வயது சிறுமி, மேச்சேரி அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார். காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த அந்த மாணவி, வகுப்பறை அமைந்துள்ள இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது.

கால் எலும்பு முறிந்து வலியால் துடித்த மாணவிக்கு ஆசிரியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனை அழைத்து சென்றனர். ஆட்சியர் கார்மேகம் மாணவியிடம் நேரில் விசாரணை நடத்தியதில் குடும்ப பிரச்சணையால் அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

மாணவிக்கு மனநல ஆலோசனை அளிக்குமாறு  மருத்துவர்களிடம் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments