வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகமாகப் பணம் அனுப்பும் மாநிலங்களில் முதலிடத்தைப் பிடித்த மகாராஷ்டிரம்..!
வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகமாகப் பணம் அனுப்பும் மாநிலங்களில் கேரளத்தை முந்தி மகாராஷ்டிரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
2020 - 2021 நிதியாண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய பணத்தில் 35 விழுக்காட்டை மகாராஷ்டிரமும், பத்து விழுக்காட்டைக் கேரளமும் பெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா சூழலில் வெளிநாடுகளில் வேலையிழந்த கேரளத்தவர் நாடு திரும்பியதே அவர்களின் பங்களிப்பு குறைந்ததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதேபோல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அதிகப் பணம் அனுப்பும் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தை அமெரிக்கா முந்தியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Comments