கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு.!
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவித்துள்ளார்.
கடந்த 13ஆம் தேதியன்று துபாயில் இருந்து கண்ணூர் வந்த 31 வயது ஆணுக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கேரளாவில் கடந்த வாரம் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதியான நிலையில், அங்கு 14 மாவட்டங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Comments