இலங்கையில் போராட்டக்காரர்களை கலைக்க வைத்திருந்த கண்ணீர் புகை குண்டுகளை திருடிச் சென்ற நபர்
இலங்கையில் போராட்டத்தைக் கலைக்க கொண்டு வந்த 50 கண்ணீர் புகை குண்டுகளை திருடி சென்று வீட்டில் பதுக்கி வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 13ஆம் தேதி நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்காக பொல்துவ (Polduwa) சந்திப்பில் திரண்ட போராட்டக்கார்களை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும் கலைக்க முயற்சித்த நிலையில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்த 50 கண்ணீர் புகை குண்டுகளை 31 வயதான இளைஞர் திருடிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.
Comments