இந்தியாவுக்கு ஆண் நண்பருடன் சுற்றுலா வந்த அமெரிக்க பெண்.. பணம் இல்லாததால் நாடகம்.. கைது செய்த டெல்லி போலீஸ்!

0 1856

இந்தியாவுக்கு தனது ஆண்நண்பருடன் சுற்றுலா வந்த அமெரிக்க பெண் ஒருவர் தனது பெற்றோரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில்,  தான் கடத்தப்பட்டதாக நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலோ மெக்லாக்லின் என்ற அந்த 27 வயது அமெரிக்க பெண் பேஸ்புக்கில் தனக்கு பழக்கமான, ஒக்கோரோ என்ற நைஜீரிய வாலிபருடன் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி இந்தியா வந்துள்ளார். வந்த சில தினங்களிலேயே பணம் தீர்ந்துவிட இருவரும் சேர்ந்து மெக்லாக்லினின் பெற்றோரிடம் பணம் பறிக்க திட்டமிட்டனர்.

வாஷிங்டனில் உள்ள தாயாருக்கு போன் செய்து தான் ஒரு நபரால் கடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக மெக்லாக்லின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணையில் இறங்கிய டெல்லி போலீசார் மெக்லாக்லினின் இ-மெயில் ID யை வைத்து நொய்டாவில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அவரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments