மாற்றியமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்று முதல் உயர்வு.!

0 2170

மாற்றியமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி உயர்வால் அரிசி, பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்று முதல் உயர்ந்துள்ளது.

பேக்கேஜ் செய்யப்பட்ட பால், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை, மாவு உள்ளிட்ட பொருட்களுக்கும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது.

12 சதவீதமாக இருந்த எல்.இ.டி பல்ப் மற்றும் சோலார் வாட்டர் ஹீட்டருக்கான ஜி.எஸ்.டி, தற்போது 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளுக்கு ஜி.எஸ்.டி யில் விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் ஐ.சி.யூக்களை தவிர, நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் அறைகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments