சேலம் மேச்சேரியில் +2 மாணவி தற்கொலை முயற்சி.. ஆட்சியர் விளக்கம்.!
சேலம் மாவட்டம் மேச்சேரியில் அரசு பள்ளி கட்டிடத்தில் இருந்து 12ஆம் வகுப்பு மாணவி கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், மாணவியின் தற்கொலைக்கும் பள்ளிக்கும் எந்த தொடர்பும் இல்லை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி, வழக்கம் போல் இன்று பள்ளிக்கு வந்த நிலையில், திடீரென பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த ஆசிரியர்கள் உடனே முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முயன்ற மாணவிக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றார். மேலும், தற்கொலைக்கு முயன்ற மாணவியின் தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
Comments