விசாகப்பட்டினத்தில் ஆடை அணிகலன் கடையில் பயங்கர தீ விபத்து.. ரூ.2 கோடி மதிப்புடைய பொருட்கள் எரிந்து நாசம்..!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் துவடா பகுதியில் உள்ள ஒரு ஆடை அணிகலன் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் தீ வேகமாக கடைமுழுவதும் பரவிவிட்டது. தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் பல மணி நேரம் போராடின. கடும் முயற்சிக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இதில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை.
எனினும் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புடைய பொருட்கள் தீயில் கருகி சாம்பலாகி விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Comments