இந்தியா-சீனா இடையே 16வது சுற்று மாரத்தான் பேச்சுவார்த்தை.. எல்லையில் படைகளைக் குவித்த சீனா பின்வாங்க மறுப்பு?
இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான 16வது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று சுமார் 12 மணி நேரம் நீடித்தது.
கிழக்கு லடாக் எல்லைக்கு அருகே குறிப்பிட்ட சில மலைச்சிகரங்களில் சீனா படைகளைக் குவித்து உள்ளதற்கு இந்தியா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா அமைக்கும் சாலைகள் பாலங்கள் குறித்தும் இந்தியா தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இரண்டு முக்கிய இடங்களில் இருந்து சீனா படைகளை விலக்கிக் கொள்ளவும் மூன்றாவது முக்கியப் பகுதியில் இந்தியா தனது ரோந்து செய்யும் உரிமையை மீட்கவும் சீனாவுடன் பேச்சு நடத்தியுள்ளது.
எல்லைப்பகுதிகளில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் ஜெட் விமானங்களைப் பறக்கவிடக்கூடாது என்றும் சீனாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Comments