எதிர்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் மார்க்ரெட் ஆல்வா நாளை வேட்புமனுத் தாக்கல்..!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மார்க்ரெட் ஆல்வா நாளை வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
டெல்லியில் நடைபெற்ற எதிர்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக மார்க்ரெட் ஆல்வாவை அறிவித்தார்.
அடுத்த மாதம் 6ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.
Comments