கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய கோரி மாணவி தந்தை மனு - உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை..!

0 4732
கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய கோரி மாணவி தந்தை மனு - உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை..!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, கடந்த 13ம் தேதி விடுதியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக கூறப்படும் நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.

மாணவியின் உடலை தாங்கள் கூறும் மருத்துவரை கொண்டு மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி சதீஷ்குமார் முன் நாளை வழக்கு விசாரணைக்கு வரும்போது, காவல்துறை சார்பில் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments