வயலுக்கு வேலைக்கு சென்ற மூன்று பேரை தாக்கி கொன்ற கரடியை அடித்து கொன்ற கிராம மக்கள்
ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் மூன்று பேரை தாக்கி கொன்ற கரடியை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அடித்து கொன்றுள்ளனர்.
வயலுக்கு வேலைக்கு சென்ற மூன்று பேர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவர்களை கிராம மக்கள் தேடி சென்றனர். அப்போது, கரடி தாக்கி மூவரும் உயிரிழந்ததை பார்த்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு அந்த கரடியை அடித்துக் கொன்றனர்.
Comments