தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்ட இண்டிகோ விமானம்!

0 11715

ஷார்ஜாவில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்த இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்ததை அடுத்து விமானம் உடனடியாக கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. அதற்கு பதிலாக மாற்று விமானம் கராச்சிக்கு அனுப்படுவதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் இரண்டு முறை இந்திய விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments