வீடு வாங்கியவர்களுக்கு 12 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த உரிமைக்கான கடிதம்.. 200 குடியிருப்பு வாசிகள் மகிழ்ச்சி!

0 2380

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கியவர்களுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு உரிமைக்கான கடிதம் கிடைத்துள்ளது.

அமராபலி சிலிக்கன் சிட்டி வளாகத்தில் 200 குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதனை வாங்கியவர்கள் சட்டச்சிக்கலில் சிக்கினர். திவாலாகிப் போன கட்டுமான நிறுவனம் மீது உச்சநீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு வாங்கியவர்களுக்கு உரிமைக்கான பத்திரம் வழங்கப்பட்டது. கடும் உழைப்பில் சேமித்த பணத்தில் வாங்கிய கனவு இல்லம் ஒருவழியாக கையில் கிடைத்ததால் குடியிருப்பு வாசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments