நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை ; போலீசார் விசாரணை
அரியலூரில் நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரியலூர் ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த நடராஜன் - உமா தம்பதியரின் மகள் நிஷாந்தினி 2020-ம் ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 529 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் 200 மதிப்பெண்கள் எடுத்திருந்த அவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக நீட் தேர்வை எதிர்கொள்ள பயின்று வந்த நிஷாந்தி, நாளை தேர்வு எழுத இருந்த நிலையில், பெற்றோரின் கனவை எவ்வாறு நிறைவேற்ற போகிறோம் என்ற மன உளைச்சலில், கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்..
நிஷாந்தினியின் வீட்டில் ஆய்வு மேற்கொண்ட போலீசார் அவர் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அதில் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவேன் என பயமாக இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும், வெளிநாட்டில் இருக்கும் தனது தந்தை அங்கிருந்து வந்து ஊரிலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும் மாணவி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
நேற்றிரவு அந்த மாணவி வாட்ஸ் ஆப்பில் தனது குடும்பத்தினரை பிரியப்போவதை குறிக்கும் வகையில் ஸ்டேட்டஸும் வைத்திருந்தார்.
Comments