திருவொற்றியூரில் 20 நாட்களாக காற்றில் பரவும் நச்சு வாயு.. கண் எரிச்சல், மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்..!
சென்னை திருவொற்றியூரில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக காற்றில் பரவி வரும் நச்சு வாயுவை கண்டறிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
திருவொற்றியூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் எரிவாயு போன்ற கடுமையான வாசனை காற்றில் கலந்து வீசுவதாகவும் இதனால் மக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
தொழிற்சாலைகளில் இருந்தே வாயுக் கசிவு ஏற்படுவதாக கூறப்படும் நிலையில், காற்றி பரவி வருவது சல்பர் டை ஆக்சைடு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எந்த தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவு ஏற்படுகிறது என தெர்மோ பார்சனல் சாம்பிளர் என்ற கருவி மூலம் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Comments