குயின்ஸ் லேண்ட் உள்ள அரசு நிலத்திற்கு மாற்றாக, தங்கள் நிலத்தை ஏற்க அந்நிறுவனம் அளித்த கோரிக்கையை நிராகரித்தது தமிழக அரசு..!

0 75164
குயின்ஸ் லேண்ட் உள்ள அரசு நிலத்திற்கு மாற்றாக, தங்கள் நிலத்தை ஏற்க அந்நிறுவனம் அளித்த கோரிக்கையை நிராகரித்தது தமிழக அரசு..!

பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள அரசு நிலத்திற்கு மாற்றாக, தங்களது நிலத்தை ஏற்கும்படி குயின்ஸ் லேண்ட் விடுத்த கோரிக்கையை நிராகரித்ததாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே குயின்ஸ்லேண்ட் அமைந்துள்ள 21 ஏக்கர் அரசு நிலத்திற்கு மாற்றாக, தங்களது நிலத்தை ஏற்கக்கோரி பூங்காவை நடத்தும் ராஜம் ஹோட்டல்ஸ் அரசிடம் கோரிக்கை விடுத்தது.

இது குறித்த வழக்கில், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்திற்கு மாற்றாக தரப்படும் இடத்தை ஏற்றால் சட்டவிரோத நடவடிக்கையை அனுமதிப்பது போன்றதாகும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் விளக்கத்தை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments