மேட்டூர் அணை நிரம்பியதால் பாசனத்திற்கு 1,13,000 கன அடி உபரி நீர் திறப்பு

0 2105

மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 92,000 கன அடியிலிருந்து 1,13,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரி நீராக 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது.

மேட்டூர் அணையின் கொள்ளளவு 93.47டி.எம்.சி ஆக உள்ளது. அதிக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments