ஓபிஎஸ்-சும், இபிஎஸ்-சும் எங்களுக்கு ஒன்றுதான், இருவரின் தயவும் தேவையில்லை-அமைச்சர் துரைமுருகன்

0 2015

ஸ்மார்ட் சிட்டி பணிகள் சரியில்லை என குற்றம் சாட்டுபவர்களில் தானும் ஒருவன் என்றும் அதற்கு மாநகராட்சி ஆணையரும் மாவட்ட ஆட்சியரும் தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு பேருந்து போக்குவரத்தை இன்று தொடங்கி வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அதிமுக அலுவலகம் சீல் வைப்பு விவகாரத்தில் தங்களுக்கு ஓபிஎஸ்-சும் இபிஎஸ்-சும் ஒன்று தான் என்றும் அவர்கள் இருவரின் தயவும் தங்களுக்கு தேவையில்லை என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.

அரசு மணல் குவாரி துவங்க அனுமதி கேட்கப்பட்டுள்ளதாவும், எல்லா ஆறுகளிலும் தற்போது தண்ணீர் ஓடுகிறது என்றும் துரைமுருகன் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments