மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து.. 14 பேர் பலி.!
மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர்.
15 பேருடன் பயணித்த பிளாக் ஹாக் ஹெலிகாப்டர், சினாலோவாவின் லாஸ் மோச்சிஸ் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், இதில் உயிர் தப்பிய ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் சோயிக்ஸ் நகரில் போதைப்பொருள் கடத்தல் மன்னன் ரஃபேல் காரோ குயின்டெரோ மெக்சிகோ கடற்படையினரால் கைது செய்யப்பட்டான்.
குயின்டெரோவை கைது செய்யும் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
Comments