இலங்கையில் பெட்ரோல் நிரப்புவதற்காக 2 நாட்களாக வரிசையில் நின்ற கிரிக்கெட் வீரர் சமிக கருணாரத்னே
கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வதற்காக பெட்ரோல் நிலையத்தில் கடந்த 2 நாட்களாக வரிசையில் நின்றதாக இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக கருணாரத்னே தெரிவித்துள்ளார்.
கிளப் கிரிக்கெட் சீசன் நடைபெற்று வருவதுடன் அடுத்தடுத்து பல்வேறு தொடர்கள் நடைபெற உள்ளதால் பல்வேறு இடங்களுக்கு பயிற்சிக்காக செல்ல வேண்டும் என்று கருணாரத்னே தெரிவித்துள்ளார்.
தற்போது 10 ஆயிரம் ரூபாய்க்கு எரிபொருள் நிரப்பியுள்ளதாகவும் இது அடுத்த 2, 3 நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்றும் கூறியுள்ள அவர், எரிபொருள் நெருக்கடியால் கிரிக்கெட் பயிற்சிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments