நாடாளுமன்றத்துக்குள் சபாநாயகரின் முன் அனுமதியின்றி துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கத் தடை..!
நாடாளுமன்றத்துக்குள் அறிவிப்பு பலகைகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கவிருக்கும் நிலையில், மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேள்வித்தாள்கள், துண்டு பிரசுரங்கள், பத்திரிகை குறிப்புகள் உள்ளிட்டவைகளை சபாநாயகரின் முன் அனுமதியின்றி விநியோகிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
Comments