பல்வேறு ஏடிஎம் மையங்களில் அடுத்தவர்களின் ஏடிஎம் கார்டுகளிலிருந்து நூதன முறையில் பணத்தை கொள்ளை அடித்த 2பேர் கைது.!
சேலம் மாவட்டம் எடப்பாடியில் பல்வேறு ஏடிஎம் மையங்களில் அடுத்தவர்களின் ஏடிஎம் கார்டுகளிலிருந்து நூதன முறையில் பணத்தை கொள்ளை அடித்த 2பேர் கைது செய்யப்பட்டனர்.
சின்னமுத்தூரைச் சேர்ந்த முருகன் என்பவர் எடப்பாடி இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்திற்கு சென்ற போது அங்கிருந்த இளைஞரிடம் தனது கார்டை கொடுத்து பண இருப்பு குறித்து பார்க்குமாறு கூறியுள்ளார்.
அந்த இளைஞரும் கார்டை வாங்கி பண இருப்பு விவரத்தை சொன்னது மாத்திரமின்றி வேறு ஒரு கார்டை அந்த இளைஞரிடம் கொடுத்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் முருகனின் ஏடிஎம் கார்டு மூலம் பணம் முழுவதையும் அந்த இளைஞர் எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முருகன் அளித்த புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 2பேரை கைது செய்தனர்.
Comments