அடுத்த 2 ஆண்டுகளில் 8 ஆயிரம் இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் ஹர்தீப்சிங்புரி!
நாடு முழுவதும் அடுத்த 2 ஆண்டுகளில் 8ஆயிரம் இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்தார்.
கெயில் இந்தியா லிமிடெட் மற்றும் அதன் குழுமத்தின் ஒன்பது நகர எரிவாயு விநியோக நிறுவனங்களால் 14 மாநிலங்களில் 166 இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் கலந்து கொண்டு காணொலி மூலம் பேசிய ஹர்தீப்சிங்புரி, கடந்த 2014ஆம் ஆண்டில் நாட்டில் 900 இயற்கை எரிவாயு நிலையங்களே இருந்தன என்றும் தற்போது 4ஆயிரத்து 500 இயற்கை எரிவாயு நிலையங்கள் இருப்பதாகவும் கூறினார்.
Comments