நீதிமன்றத்தில் ஓபிஎஸ் நடத்தும் நாடகம் விரைவில் முடிவுக்கு வரும் - திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுக அலுவலகத்தில் நடைப்பெற்ற மோதலில் வன்முறையில் ஈடுபட்டது யார் என்பதற்கு போதிய வீடியோ ஆதாரங்கள் உள்ளன என்றும் தாக்குதல் நடத்திய யாரும் தப்பித்து விட முடியாது என்றும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தகராறில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 14 பேரை சந்தித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாதவரம் மூர்த்தி ஆகியோர் இன்று ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், பாதுகாப்பு கேட்ட நிரபராதிகள் 14பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று கூறினார்.
Comments