அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பழைய பஸ் பாஸை காண்பித்து பேருந்துகளில் பயணிக்கலாம்.!

0 1656

அரசு பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்கள் பழைய பஸ் பாஸ்களை காண்பித்து மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நடப்பு கல்வியாண்டிற்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சில பேருந்து நடத்துனர்கள் மாணவர்களை கீழே இறங்க சொல்வதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து மாணவர்கள், தங்களுக்கு 2019-20 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பேருந்து பயண அட்டைகளை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் சீருடையில் உள்ள மாணவர்களை கீழே இறங்க சொல்லும் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments