சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது பாறைகள் உருண்டு மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு!
ஹிமாச்சல பிரதேசத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது பாறைகள் உருண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.
ஹிமாச்சல பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் குலு மாவட்டம் நிர்மந்த் தாலுகாவில் உள்ள பாகிபுல் என்ற இடத்தில் நேற்றிரவு 10.45 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது பாறைகள் உருண்டு விழுந்தன.
இதில் சோலன் மாவட்டத்தை சேர்ந்த தேவானந்த் என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த சஞ்சீவ் குமார், தீபக் குமார் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் ராம்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments