நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை - மரங்கள் சாய்ந்தன.. வன கிராமங்களில் போக்குவரத்து துண்டிப்பு..!
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அரக்கோணத்தில் இருந்து 72 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நீலகிரி வந்தடைந்தனர்.
தொடர் மழையால், மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தெங்குமரஹாடா வன கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை நடுவட்டம், மஞ்சூர், குந்தா போன்ற பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மேலும், தொடர் மழையால், கூடலூர், தோட்ட மூலா ஏழமரம் பகுதியில் உள்ள தரைப்பாலம் உடைந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே, குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மீட்கப்பட்டு பேரிடர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Comments