வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை மீண்டும் கட்டாயமாக்கியது கனடா.!
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் கனடா வருபவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யும் நடைமுறையை மீண்டும் தொடங்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி வரும் ஜூலை 19ம் தேதி முதல் வான்கூவர், கல்கரி, மாண்ட்ரீல் மற்றும் டொராண்டோ ஆகிய 4 முக்கிய விமான நிலையங்களுக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து கனடா வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை என்ற நடைமுறை கடந்த ஜூன் 11ம் தேதி ரத்து செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு அதிகரிப்பதால் பரிசோதனை மீண்டும் துவங்க உள்ளது.
Comments