சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க ஷெபாஸ் ஷெரீப் அரசு முடிவு.!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவை சந்தித்துள்ளதால், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை குறைப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
நிதி நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி திட்டத்திற்காக தொடர்ந்து எரிபொருள் விலையை ஷாபஸ் ஷெரிப் அரசு உயர்த்தியது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், பெட்ரோல் லிட்டருக்கு 18 ரூபாய் 50 பைசாவும், டீசல் லிட்டருக்கு 40 ரூபாய் 54 பைசாவும் குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
Comments