அஜ்மீர் தர்கா மதகுரு கவுஹர் சிஷ்டி ராஜஸ்தான் போலீசாரால் கைது.!
ராஜஸ்தானின் பிரசித்தி பெற்ற அஜ்மீர் தர்காவின் மதகுரு கவுஹர் சிஸ்டியை ஹைதராபாதில் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் விமானம் மூலம் ஜெய்ப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த மாதம் தர்காவின் பிரதான வாயிலில் பகைமையைத் தூண்டும் விதத்தில் பேசியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் சர்மாவுக்கு எதிராக அவர் உரை நிகழ்த்தினார்.இந்த வெறுப்புப் பேச்சு தொடர்பான வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து கவுஹர் சிஷ்டி ஜூன் 29 ஆம் தேதியன்று அன்று ராஜஸ்தானை விட்டு வெளியேறி தலைமறைவாக இருந்தார்.
Comments