உலகம் முழுவதும் திடீரென முடங்கிய ட்விட்டர் - பயனர்கள் அவதி
பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று திடீரென முடங்கியது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த பாதிப்பு காணப்பட்டது.
இதனால் ட்விட்டர் பயனர்கள் ட்வீட்களை பதிவு செய்வதிலும், தகவல்களை பார்ப்பதிலும் பல சிக்கல்களை சந்தித்தனர்.
அமெரிக்காவில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பயனாளர்கள் இது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளனர். சில நிமிடங்கள் மட்டுமே செயலிழந்த ட்விட்டர் சேவை பின்னர் மீண்டும் வழக்கம் போல செயல்பட தொடங்கியது.
Comments