வேலையில்லா பட்டதாரி படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் தொடர்பான வழக்கு -ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு
'வேலையில்லா பட்டதாரி' படத்தின் புகைப்பிடிக்கும் காட்சிகள் தொடர்பான வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நாளை ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அப்படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறவில்லை என்ற புகாரில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
இதற்கு எதிரான வழக்கில், படத்தில் எச்சரிக்கை வாசகம் இடம்பெற்றதாகவும், தணிக்கை துறையால் சான்றிதழ் வழங்கப்பட்டதால், விசாரணைக்கு தடை விதித்து, ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என ஐஸ்வர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Comments