டீசல் டேங்க்கில் கசிவு? நடு ரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்..டி.வி., பிரிட்ஜ், ஏசி சேதம்..!

0 1924

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே டி.வி., பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போதே திடீரென தீப்பற்றி எரிந்தது.

பொன்னாக்குடியில் இருந்து நாங்குநேரி நோக்கிச் சென்ற சரக்கு வாகனம், நான்கு வழிச்சாலையில் வந்த போது பின் பகுதியில் திடீரென தீப்பற்றியதாக கூறப்படுகிறது. பின்னால் வந்த வாகன ஓட்டிகள் எச்சரிக்கை விடுத்ததால், சரக்கு வாகன ஓட்டுநர் உடனடியாக கீழே இறங்கி உயிர்தப்பிய நிலையில், வாகனத்தில் இருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.

சரக்கு வாகனத்தில் டீசல் டேங்க்கில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments