தூக்க ஆள் இருக்கா? சவால் விட்ட ஆப்பிரிக்க கலைஞரை மீண்டும் மூக்குடைத்த தமிழன்..!

0 11272

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற ஜம்போ சர்க்கஸில் மீண்டும் சவால் விட்ட ஆப்பிரிக்கா கலைஞரை தோற்கடித்த கல்லூரி மாணவர், 80 கிலோ எடையை ஒற்றை கையால் தலைக்கு மேல் தூக்கி சாகசம் செய்தார்.

நேற்று நடைபெற்ற சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது ஆப்பிரிக்காவை சாகச வீரர் ஒருவர் 80 கிலோ எடை கொண்ட கெட்டில் பெல் என்ற உடற்பயிற்சி கருவியை தூக்கி சாகசம் செய்த நிலையில் கூட்டத்தில் இருந்தவர்கள் யாரேனும் இதனை தூக்க முடியுமா என சவால் விடுத்தார்.

அதனை ஏற்ற கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தை சேர்ந்த பிரேவ் மேன் ஹார்ட் என்ற கல்லூரி மாணவர் 80 கிலோ உடற்பயிற்சி கருவியை தூக்கி அசத்தினார். இதற்கும் முன்னும் ஆப்பிரிக்க கலைஞரின் சவாலை நாகர்கோவில் இளைஞர் ஒருவர் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments