நேற்று மாலத்தீவு.! இன்று சிங்கப்பூர்.! நாளை சவுதி.! நாடு, நாடாக ஓடும் கோ.பக்சே.!

0 1920

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் தப்பிச் சென்றார். இச்சூழ்நிலையில் இலங்கையில் வியாழக்கிழமை காலை வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியால் ஆவசேமடைந்த இலங்கை மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, ராணுவ உதவியுடன் மாலத்தீவு தப்பிச் சென்றார். இதனால் மேலும் கோபமடைந்த மக்கள் பிரதமர் அலுவலகத்திற்குள்ளும் நுழைந்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இலங்கையில் வியாழக்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பொது சாலைகள், பூங்காக்கள், ரயில் நிலையங்கள், பொழுதுபோக்கு மைதானங்கள் மற்றும் பொது மைதானங்களில், எழுத்துப்பூர்வ அனுமதி பெற்றவர்கள் தவிர யாரும் செல்லக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்திற்குள், பிரதமர் அமரும் இருக்கையை ராணுவத்தினர் பாதுகாத்து வருகின்றனர். ராணுவ டாங்கி மூலம் ராணுவத்தினர் சாலைகளில் ரோந்து வந்தனர். இந்நிலையில் பொது இடங்களிலிருந்து கிளம்புவதாக போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே, மாலத்தீவிலிருந்து சவுதி ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோத்தபய ராஜகபக்சே, சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து அவர் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு செல்வார் என மாலத்தீவு அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments