கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், ஜூலை 15ஆம் தேதியன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments