கணவரை பிரிந்து வாழும் பெண், குழந்தையுடன் வெளிநாடு செல்வதை தடுக்க முடியாது - மும்பை உயர் நீதிமன்றம்
பதவி உயர்வு பெற்று வெளிநாட்டு பணிக்குச் செல்லும் பெண், தனது 9 வயது மகளை அழைத்துச் செல்வதை தடுக்க முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கணவரை பிரிந்த பெண் பொறியாளர் ஒருவர், 2015ஆம் ஆண்டு முதல் தனது மகளை தனியே வளர்த்து வருகிறார். அவருக்கு போலந்தில் பணியாற்ற 2 ஆண்டுகள் வாய்ப்பு கிடைத்த நிலையில், குழந்தையை உடன் அழைத்து செல்வதற்கு பிரிந்து வாழும் கணவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், குழந்தையா வேலையா என அப்பெண்ணை கட்டாயப்படுத்த முடியாது என்றும் குழந்தை பெரும்பாலான நேரங்களில் தாயுடன் இருப்பதால் அவரை வெளிநாடு அழைத்து செல்ல அனுமதி அளித்தும் உத்தரவிட்டது. அதேநேரத்தில் விடுமுறை காலத்தில் குழந்தை இந்தியாவில் தந்தையுடன் தங்கியிருக்கவும், தந்தை போலந்து சென்றால் குழந்தையை சந்திக்கவும் தடையில்லை எனவும் உத்தரவிட்டுள்ளது.
Comments