கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு... மோசடி செய்ய முயன்ற கும்பல்

0 1579

கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கி பலரிடம் பண மோசடி செய்ய முயன்ற நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தனது இன்ஸ்டாகிராமில் ராதாகிருஷ்ணன் பதிவிட்ட புகைப்படங்களை பயன்படுத்தி அவரது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கிய கும்பல், அவரை பின் தொடர்பவர்களை குறிவைத்து, அவரை போல் குறுஞ்செய்தி அனுப்பி பணம் கேட்டுள்ளனர்.

சந்தேகமடைந்த சிலர் ராதாகிருஷ்ணனிடம் இது குறித்து தெரிவித்த நிலையில், தனது பெயரில் உள்ள போலி இன்ஸ்டாகிராம் கணக்கை நம்பி யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள அவர், மோசடி கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments