சட்டவிரோத கட்டிடங்கள் புல்டோசர்களால் இடிக்கப்படுவதற்கு தடைவிதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்
உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், சட்டவிரோத கட்டிடங்கள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்படுவதற்கு உடனடியாக தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
ஜாமியத் உலாமா ஏ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு தாக்கல் செய்த மனுவில், உத்தரபிரதேசம், அசாம், குஜராத், மத்தியபிரதேச மாநிலங்களில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்படுவதால் அதற்கு தடைவிதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த பி.ஆர்.கவாய், பி.எஸ். நரசிம்மா அமர்வு, நகராட்சி சட்டத்தின் கீழ் சட்டவிரோத குடியிருப்புகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அதை தடுக்கும் வகையில் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பினர். இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என்ற நீதிபதிகள் விசாரணையை ஆக்ஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Comments