கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்த ராணுவ ஹெலிகாப்டர்... 2 வீரர்கள் உயிரிழப்பு
கிரீஸ் அருகே சாமோஸ் தீவில் தீயணைப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.
சோவியத் காலத்து எம்.ஐ. 8 ரக ஹெலிகாப்டரை உக்ரைனிடம் இருந்து வாடகைக்கு வாங்கி காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். தீயணைப்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து மூழ்கியது.
மால்டோவா நாட்டை இருந்த இரு விமானிகள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ரோமன் மற்றும் கிரீஸ் நாடுகளை சேர்ந்த இரு வீரர்கள் உயிரிழந்தனர்.
Comments