மயிலாக மாற நினைத்து குயிலான வான்கோழி..! நடிகைக்கு நேர்ந்த சோகம்..! ரூ.5 கோடியில் 40 முறை உருவமாற்று சிகிச்சை

0 3876

பிரபல அமெரிக்க மாடல் அழகி கிம் கர்தாஷியன் போல மாற வேண்டும் என்பதற்காக 40 முறை உருவமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட  நடிகையின் உருவம் விசித்திரமாக மாறியதால், பழைய நிலைக்கு திரும்புவதற்காக 95 லட்சம் ரூபாய் செலவழித்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை ஜெனிபர் பாம்ப்லோனா என்பவர் தனது உருவத்தை அமெரிக்க மாடல் அழகி கிம் கர்தாஷியன் ((Kim Kardashian)) போல மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக 40 க்கும் மேற்பட்ட முறை உருவமாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

சிறுவதில் இருந்தே பிரபலங்களில் நடை உடை பாவனைகளை இமிடேட் செய்யத் தொடங்கிய நடிகை ஜெனிபர் பாம்ப்லோனா, 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்து தன்னை மாடல் அழகி கிம் கர்தாஷியன்போல மாற்றிக் கொள்ள அறுவை சிகிச்சை மூலம் மெனக்கெட்டுள்ளார் . ஒவ்வொரு முறை நடந்த அறுவை சிகிச்சையிலும் ஏற்பட்ட ஏதாவது ஒரு குறைபாட்டால் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையாக இருந்த அழகு மாறி ஜெனிபர் பாம்ப்லோனா விசித்திரமான உருவ அமைப்புக்கு மாறியதாக கூறப்படுகின்றது.

ரசிகர்கள் கிம் அபரா என்று அழைப்பது தனக்கு ஆத்திரமாக வந்ததால் தான் இனி தானாக இருப்பது என்று முடிவெடுத்து தனது பழைய உருவத்துக்கு மாற்றிக் கொள்ள மீண்டும் அருவை ச்கிச்சை மேற்கொள்ள விருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உருவமாற்று அருவை ச்கிச்சை செய்து கொள்வது தனக்கு போதை போல இருந்ததால் எதை பற்றியும் கவலைப்படாமல் அதனை மேற்கொண்டதாகவும் ஒரு கட்டத்தில் அது தனக்கு திருப்தியையும் மகிழ்ச்சியையும் தரவில்லை என்பதால் பழைய நிலைக்கு திரும்புவதற்காக இஸ்தான்புல்லில் உள்ள மருத்துவரை அனுகி பழைய உடல் அமைப்பை பெறுவதற்காக 95 லட்சம் ரூபாயை அறுவை சிகிச்சைக்காக வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments