ஆட்சேர்ப்பு நடவடிக்கையை குறைக்கும் கூகுள் நிறுவனம்.. பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்பதால் நடவடிக்கை..!
பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதால், நடப்பு ஆண்டில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை குறைத்துக் கொள்வது என கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை, ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள இ-மெயிலில் இதை தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் பொறியியல், தொழில்நுட்ப பிரிவுகளில் ஆட்களை சேர்க்க கவனம் செலுத்தப்படும் என்றும் சுந்தர்பிச்சை கூறியுள்ளார்.
அதேநேரத்தில் மற்றொரு தகவல்தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் ஆட்குறைப்பை தொடங்கியுள்ளது.
நிறுவனத்தில் மொத்தமுள்ள 1.81 லட்சம் ஊழியர்களில் ஒரு சதவிகிதம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Comments