சீனா, பாகிஸ்தான் கடற்படைகள் 4 நாட்கள் கூட்டு போர் பயிற்சி..!
பசிபிக் பெருங்கடலில் சீனா, பாகிஸ்தான் கடற்படைகள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
ஷாங்காய் நகரில் ராணுவ துறைமுகம் அருகே கடல் காவலர்கள்-2 எனும் பெயரில் நான்கு நாட்கள் நடைபெறும் கூட்டு பயிற்சி, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது, செயல்பாட்டு திறனையும் அனுபவத்தையும் பரிமாறிக்கொள்வது, இரு நாடுகள் ராணுவத்திற்கு இடையிலான பாரம்பரிய நட்புறவை மேம்படுத்துவது உள்ளிட்டவை நோக்கமாக கொண்டுள்ளது.
Comments