சிங்கம் மீசை போலீசுக்கு கெட் அவுட் சொல்லி செமயா செதுக்கிய நீதிபதி ..! உத்தரவால் மீசை ஒழுக்கமாச்சி..!
உதகையில் நீதிமன்றத்தில் ஆஜராக சிங்கம் சூர்யா போல மீசையுடன் சென்ற காவலரை, மீசையை ஒழுக்கமாக வெட்டிவிட்டு நீதிமன்றத்துக்குள் வருமாறு நீதிபதி திருப்பி அனுப்பிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
சிங்கம் படத்தில் கொக்கி மீசையுடன் முரட்டு காவல் அதிகாரியாக தோன்றி திரையரங்கை அதிரச்செய்தவர் நடிகர் சூர்யா..!
சிங்கம் சூர்யாவை பார்த்து தமிழகத்தில் ஏராளமான போலீசார் அதே போன்ற கொக்கி மீசையுடன் சுற்ற ஆரம்பித்தனர். சிலர் பழைய நிலைக்கு மாறிவிட்டாலும் சிலர் இன்னும் அதே கொக்கி மீசையுடன் வலம வருகின்றனர்.
அந்தவகையில் கூடலூர் அருகே உள்ள அம்பலமூல காவல் நிலையத்தில் காவலராக பணி புரிந்து வரும் ராஜேஷ் கண்ணா என்பவர் சிங்கம் சூர்யா போல கொக்கி மீசையுடன், வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக , நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு சென்றார்.
அவரை மேலும் கீழுமாக உற்று நோக்கிய நீதி பதி முருகன், சற்று கோபமடைந்து, மீசையை ஒழுக்கமான முறையில் சரி செய்த பின் நீதிமன்றத்திற்கு நுழைய வேண்டும் என கூறி திருப்பி அனுப்பினார். இதையடுத்து காவலர் ராஜேஷ் கண்ணா நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர் ராஜேஷ் கண்ணா அருகில் உள்ள சலூனுக்கு சென்று கொக்கி மீசையை மழித்து , முறையாக வெட்டி, ஒழுக்கமாக சரி செய்த பின்னர் மாவட்ட நீதிமன்றத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
Comments