மந்தநிலை அச்சம் காரணமாக கச்சா எண்ணெய் விலை 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவு
மந்தநிலை அச்சம் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய்யின் எதிர்கால ஒப்பந்தங்கள் பீப்பாய் ஒன்றுக்கு 96.09 அமெரிக்க டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. ரஷ்யா-உக்ரைன் மோதலால் கடந்த பிப்ரவரி மாதம் 115 அமெரிக்க டாலராக உயர்ந்தது.
மந்த நிலை அச்சம், சீனாவில் புதிதாக போடப்பட்டு வரும் கொரோனா பொதுமுடக்கம் உள்ளிட்டவைகள் கச்சா எண்ணெய் விலை குறைய காரணம் என கூறப்படுகிறது.
Comments