ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் திறனை அமெரிக்க ராணுவம் குறைத்துவிட்டது - அதிபர் ஜோ பைடன்.!
சிரியாவின் தீவிரவாத தலைவரை அழித்து, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் திறனை அமெரிக்க ராணுவம் குறைத்துவிட்டதாக அதிபர் பைடன் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மெஹர் அல் அகலை வான்வழி தாக்குதலில் வீழ்த்தியதில் அமெரிக்க ராணுவத்தின் நுண்ணறிவு திறன் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த வான்வழி தாக்குதல் அமெரிக்க ஆயுத படைகளின் துணிச்சல் மற்றும் திறமைக்கான சான்றாக விளங்குகிறது என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.
Comments