பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் ரசாயன முறையில் ஆண்மை நீக்கம்.. தாய்லாந்தில் நிறைவேறியது மசோதா.!

0 4039

பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதிக்கும் மசோதாவை தாய்லாந்து செனட் நிறைவேற்றியது.

இந்த மசோதா 145 செனட்டர்களின் ஆதரவைப் பெற்றது. 2013 மற்றும் 2020 க்கு இடையில் தாய்லாந்து சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 16,ஆயிரம் பாலியல் குற்றவாளிகளில் 4,848 பேர் மீண்டும் பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

குறுகிய சிறை காலத்திற்கு பிறகு மீண்டும் குற்றமிழைக்கும் நிலையில் இந்த மசோதாவின் கீழ் அவர்கள் ரசாயன ஊசிகளைப் பெறலாம்.

தற்போது, போலந்து, தென் கொரியா, ரஷ்யா, எஸ்டோனியா மற்றும் அமெரிக்காவின் சில மாநிலங்களில் மட்டுமே கெமிக்கல் காஸ்ட்ரேஷன் பயன்பாடு சட்டப்பூர்வமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments