ஆழ்கடலில் மைக்ரோ பிளாஸ்டிக்கை உறிஞ்சும் ரோபோ மீன்.. சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.!

0 1591

ஆழ்கடலில் காணப்படும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களை உறிஞ்சும் மீன் வடிவிலான சிறிய ரோபோவை, சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த ரோபோ மீன் 1.3 செ.மீ நீளம் கொண்டவை.

அகச்சிவப்பு ஒளிகதிர் மூலம் இயங்கும் இந்த மீன், கழிவுகளை உறிஞ்சி, சேதமடைந்தாலும் தன்னைத் தானே மீட்டெடுக்கும் திறன் கொண்டவை. மற்ற ரோபோக்களை விட வேகமாக நீந்தும் திறன் கொண்ட ரோபோ மீன், கடலில் ஏற்பட்டுள்ள மாசு குறித்த விவரங்களை அறிந்து கொள்ள பயன்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments